பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன் சென்னை அண்ணாநகரில் வாக்களித்துவிட்டு தாராபுரம் தொகுதிக்கு புறப்பட்டார்

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் தாராபுரம்( தனி ) தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் காலை 7:30 மணிக்கு சென்னை அண்ணாநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து காரில் தாராபுரம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,921FansLike
3,868FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles